கோவையில் உள்ள விடுதியில் தங்கிய 22 வயது இளம்பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6ஆம் தேதி தன் தோழியுடன், கோவை காந்திபுரத்தில் உள்ள KFC உணவகத்திற்குச் சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், அப்பெண்ணிற்கு அந்நிறுவனம் ரூ.10,000 நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.