இந்தியாவில் 47% ஊழியர்கள், தங்களின் ஊதியத்தில் திருப்தி இல்லாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 77% ஊழியர்கள், ஊதிய உயர்வை எதிர்பார்த்து காத்திருப்பதாக FOUNDIT நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், 25% பேருக்கு ஊதியம் திருப்தியளிக்காவிட்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஊழியர்களின் நலன் கருதி, நிறுவனங்களை ஊதியத்தில் கவனம் செலுத்த வைப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.