செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கடந்த 22ஆம் தேதி மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரதன் பவுரி என்பவர் விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய மறுத்துள்ளனர். விசாரணையில், அவரிடம் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த இளைஞர் காலில் ஏற்பட்ட காயத்துடன் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார்.