கலசப்பாக்கம்: தீ வைத்து படுகாயம் அடைந்த வாலிபர் உயிரிழப்பு

56பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட தேவனாம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் இளங்கோவன் (வயது 32). இவர் கடந்த 30-ந் தேதி சாதி வெறீர்களால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்த அவர் கடந்த 2-ந் தேதி உயிரிழந்தார்.


இவரது உடலை அடக்கம் செய்யாமல் இளங்கோவனை தீ வைத்து கொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யக் கோரி இன்று தொடர்ந்து 5-வது நாளாக அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உயிரிழந்த இளங்கோவனின் உறவினர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை சந்திக்க திருவண்ணாமலைக்கு வந்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருகில் உள்ள பகுதியில் இருந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய படி ஊர்வலமாக வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை அடைந்த படி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி