திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரணமல்லூர் அடுத்த கோணமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் ஆண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். பின்னர் ஏழாம் வகுப்பு மாணவர்கள் முகில் குமார், மருதமலை ஆகியோர் ஏஜ் தொழில்நுட்பத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் கருவி கண்டுபிடித்து பெங்களூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பரிசு பெற்றனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.