தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

54பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அண்ணா சிலை அருகே திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் பேரூர் கழகம் சார்பில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா எ. வ. வே. கம்பன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக போளூர் திமுக நகர செயலாளர் தனசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து எ. வ. வே. கம்பன் உரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், திமுக தலைமை கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி திமுக அரசின் சாதனைகள் மற்றும் அரசு பொதுமக்களுக்கு அளித்து வரும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாகவும், நகைச்சுவையாகவும் பேசினார். அதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், போளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கே. வி. சேகரன், மாவட்ட துணை தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எதிரொலி மணியன், பொதுக்குழு உறுப்பினர்கள், திமுக பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி