திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர்

69பார்த்தது
திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர்
திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள்களில் வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மாதமும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர். 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அன்னதானம் வழங்கினார். உடன் கழக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி