திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான கலைஞர் நூலகத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் E.V. வேலு திறந்து வைத்து நூலகத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி. சரவணன், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.