திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலின் உபத்திருக்கோயிலான சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக அன்னதானத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விழாவினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி இன்று(13.02.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.