மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

55பார்த்தது
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
செய்யாறு கல்வி மாவட்டம், செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 2024 - 25ஆம் கல்வியாண்டில், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனா்.

மாணவிகளை வரவேற்கும் விதமாக பள்ளி வாசலில் இருந்து சிவப்புக் கம்பளம் விரித்து, மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்று மகிழ்ந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை சாா்பில் மாணவா்களின் நலன் கருதி பள்ளியிலேயே ஆதாா் பதிவு செய்யும் சிறப்பு முகாமை தொகுதி எம். எல். ஏ. ஒ. ஜோதி தொடங்கிவைத்து, அரசு சாா்பில் வழங்கப்படும் பாடப் புத்தகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், செயலா்கள் ஜேசிகே. சீனிவாசன், வி. ஏ. ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you