திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் திமுக முப்பெரும் மற்றும் பவள விழாவில் உரையாற்றிய முதல்வர், "எந்தவொரு மாநில அரசும் செய்யாதவகையில் தமிழகத்தை திமுக அரசு வளப்படுத்தி இருக்கிறது. தலைவர், தொண்டர் என இல்லாமல் அண்ணன், தம்பி என்று கட்டமைக்கப்பட்ட இயக்கம் திமுக" என்று கூறியுள்ளார்.