திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தாமரைப்பாக்கம் கிராமத்தில் தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரரை கண்டித்தும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டித்தும் 100 நாள் வேலையில் பணம் மத்திய அரசு வழங்கவில்லை என்று பொய்யான தகவலை பரப்பும் திமுக அரசை கண்டித்தும் பல்வேறு முறை கேடுகளை கண்டித்து இன்று 12. 00 மணி அளவில் புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் மாவட்ட தலைவர் K. இரமேஷ் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாநில, மாவட்ட, மண்டல் மற்றும் கிளை, அணி பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.