ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 2) பெங்களூரு - குஜராத் அணிகள் மோதின. இதில், குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த நிலையில், இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார், “பவர்பிளேவுக்குப் பிறகு நாங்கள் 190 ரன்களை இலக்காகக் கொண்டிருந்தோம். ஆனால் ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தது இந்த போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பவர்பிளேயில் நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்ததும் ஒரு தவறு தான்” என தெரிவித்தார் .