தமிழக சட்டப்பேரவையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய கொள்முதல் விலை உயர்வை எப்போது அமல்படுத்துவீர்கள்” என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், “வரும் செப்டம்பர் மாதத்தில் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும்” என பதிலளித்துள்ளார். மேலும், “விரைவில் கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.4000 ஆக உயர்த்தப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.