சென்னையில் தவெக அலுவலக திறப்பு விழா என்ற பெயரில் ஆதம்பாக்கத்தில் சாலையை மறித்து தவெகவினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தவெக சார்பில் நடைபெற்ற புதிய அலுவலகம் மற்றும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொள்ள இருக்கிறார். அவரை வரவேற்க நிர்வாகிகள் சாலையின் நடுவே குவிந்தனர். ‘மக்களை இடையூறு செய்யக் கூடாது’ என அங்கிருந்த போலீசார் எச்சரித்தனர். இதனால், நிர்வாகிகள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.