கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்

81பார்த்தது
கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ளவர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி. செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையை முன்னிட்டு தாயாருடன் சென்று விவசாய வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது நிலத்திற்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த படவேட்டான் மகன் பார்த்திபன் என்பவர் அவர்களை வழிமறித்தும் தகாத வார்த்தைகளால் பேசியும் கையை பிடித்து இழுத்தும் மானபங்கம் செய்ததாக கூறப்படுகின்றது. பின்னர் பார்த்திபன் கையில் வைத்திருந்த செல்போனால் அவர்களை தாக்கி கொலை மிரட்டல் பிடித்துள்ளார். இது குறித்து வந்தவாசி வடக்கு போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி