திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோவிலில் இன்று ஆடி மாத ஏகாதசி மற்றும் ரோகிணி நட்சத்திர உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் உற்சவர் ஆழ்வார் மற்றும் கோஷ்டமூர்த்தி கிருஷ்ணருக்கு புதிய வஸ்திரம், பூமாலைகள் சாற்றி அர்ச்சனை செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.