தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பெயருக்காக அரசியலுக்கு வந்த கட்சியல்ல; வீறு கொண்டு எழுந்து பெற்றி காணப்போகும் கட்சி என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை உணர்த்துவோம். நம் மீது ஏகப்பட்ட கேள்விகளை வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர். எச்சரிக்கையுடன் களமாடுவது அவசியம். வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என கூறியுள்ளார்.