சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்புப் பணிக்கு ரூ.67 லட்சம் மதிப்பிலான புகை பரப்பும் இயந்திரங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
ரிப்பன் மாளிகையில் இன்று (அக்., 04) நடைபெற்ற நிகழ்வில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக அவசர மீட்பு பணிக்காக 2 படகுகளை சொந்தமாக மாநகராட்சி நிர்வாகம் வாங்கிருந்தது.