இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளை கொண்டாடும் வகையில் 'உலக வன விலங்குகள் தினம்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இறைத்தூதுவராக போற்றப்பட்ட அசிசி, தனது வாழ்நாளில் விலங்குகள் மீது அன்பு கொண்டவராக விளங்கினார். விலங்குகளை காப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். எனவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக 1931-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.