ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ம் தேதி உலக விலங்குகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விலங்குகளின் நலனை உறுதி செய்வதையும், இயற்கையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதையும், அழிந்து வரும் விலங்குகளை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 1931 மே மாதம் இத்தாலியில் நடந்த சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு மாநாட்டில், அக்டோபர் 4ம் தேதி உலக விலங்குகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.