திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் பகுதியில், தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றி கழகம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி, இன்று (பிப்ரவரி 18) சிந்தனை சிற்பி சிங்காரவேலன் ஐயா அவர்களின் 165வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் திருமலை தலைமையில் சிங்காரவேலன் ஐயா அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது,
மாவட்ட இணைச் செயலாளர் ஹரிகரன், பொருளாளர் பிரகாஷ், துணை செயலாளர் ராஜேஸ்வரி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகரம், ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் அணி கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.