உடுமலை மதுரை வீரன் கோவில் திருவிழாவில் திருக்கல்யாணம்

551பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டுயு எஸ் எஸ் காலனி பகுதியில் 57 ஆண்டுகள் பழமையான மதுரை வீரன் கோவில் திருவிழா நேற்று (9-7-24)ஆனி மாதம் 25 ம் தேதி துவங்கியது இன்று முக்கிய நிகழ்வான இன்று ஸ்ரீ மதுரை வீரன் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக மாரியம்மன் கோவில் சுந்தர் அர்ச்சகர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் சார்பில் திருமாங்கல்யம் மாலைகள் புத்தாடைகள் உள்ளிட்ட 25 வகையான சீர்வரிசைகள் சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. மேலும் பால் பன்னீர் புஷ்பம் மஞ்சள் உள்ளிட்ட 14 வகை அபிஷேகங்கள் மதுரை வீரன் சாமிக்கு மேற்கொள்ளப்பட்டது பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மதுரை வீரன் சாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமர்ச்சையாக நடந்து முடிந்த நிலையில் மாலை மாத்துதல் தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மதுரை வீரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் மேற்கொண்டனர்

தொடர்புடைய செய்தி