உடுமலை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பரிசு

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜயா தலைமை வகித்தார். பள்ளி இலக்கிய மன்ற செயலாளர் தமிழாசிரியர் சின்ராசு வரவேற்றார். ஆண்டு விழா முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி