திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை இடைவிடாமல் கன மழை பெய்தது இதனால் இதுதான் சாலையான உடுமலை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாக்கடைகள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் மழை வரும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.