ஸ்பின்னிங் தொழில்நுட்ப ஜவுளிப்பிரிவுகளில் பயிற்சி

82பார்த்தது
ஸ்பின்னிங் தொழில்நுட்ப ஜவுளிப்பிரிவுகளில் பயிற்சி
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு
ஸ்பின்னிங் தொழில்நுட்ப ஜவுளிப்பிரிவுகளில் பயிற்சி

இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித் தொழில் ஒரு உன்னதமான இடத்தை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராமப் புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலை வாய்ப்பினை வழங் குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கிய மானதாகும். தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப் புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின் படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் களுக்கும், பெண்களுக்கும் ஸ்பின்னிங் மற்றும் தொழில் நுட்ப ஜவுளிப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி https: //tntextiles. tn. gov. in/jobs/ இணையதள முகவரியில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி