சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியிடம் இருந்து, மர்ம நபர்கள் 3 சவரன் செயினை பறித்துச் சென்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகளான 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பட்டதாரியான இருவரும் வேலையில் சரியாக சம்பளம் கிடைக்காததால், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்-ஐ பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. வீடியோ பார்த்து கொள்ளையில் ஈடுபட்ட முதல் சம்பவத்திலேயே போலீசாரிடம் சிக்கி நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.