லேப் டெக்னீசியன்களுக்கு இலவச பயிற்சி

56பார்த்தது
லேப் டெக்னீசியன்களுக்கு இலவச பயிற்சி
திருப்பூரில் உள்ள சாய ஆலைகள் அனைத் தும் உலகில் முதன்முறையாக பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்ப டுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாய ஆலைகள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டி, அதற்கான முயற்சிகளை சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் மேற் கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பயிற்சி பெற்ற தொழிலாளர்களை சாய ஆலைகளில் பணியமர்த்தும் வகையில், லேப் டெக்னீசியன்களை தயார் செய்ய உள்ளனர்.
இதற்காக திருப்பூர் ராயபுரத்தில் உள்ள சாய ஆலை உரிமையாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் இதற்காக பயிற்சி மற்றும் பரி சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி நிலையம் மூலமாக முதலாவ தாக லேப் டெக்னீசியன் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 12 பேர் பயிற்சி யில் சேர்ந்து அவர்களுக்குஇலவசமாக பயிற்சி கொடுக்கப்படுகிறது.
பயிற்சி முடிந்தவுடன் அவர்கள் நேரடியாக சாய ஆலைகளில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த பயிற்சி மூலம் சாய ஆலை களுக்கு பயிற்சி பெற்ற லேப் டெக்னீசியன் கள் கிடைப்பதால் சாய ஆலைகளின் உற்பத் தியில் தரத்தை மேம்படுத்த முடிவும். பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் திருப் பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங் கத்தை தொடர்பு கொள்ளலாம் என்று சங்கத் தின் தலைவர் காந்திராஜன் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you