திருச்சி ஜீயபுரம் போலீசில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி குழுமணி சாலையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பாஸ்கரன்(70) நேற்று (டிச.19) ஜீயபுரம் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், கடந்த 16ம் தேதி அல்உம்மா இயக்க தலைவர் பாஷா இறந்ததையடுத்து, துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சீமான், சுப்ரீம் கோர்ட்டை தரக்குறைவாக விமர்ச்சித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக அந்த புகாரில் கூறியுள்ளார்.