டெல்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சாலையின் அருகே வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள், சாலையில் உள்ள பொருள் வெடிகுண்டாக இருக்குமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். பார்ப்பதற்கு பெரிய அளவினா பை போன்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பாஜக அலுவலகம் அருகே இந்த மர்ம பொருள் இருப்பதால், அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, போலீசார் இதுகுறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.