பிரசவத்தின் போது தாயும், சேயும் பலி.. கொந்தளித்த உறவினர்கள்

52பார்த்தது
பிரசவத்தின் போது தாயும், சேயும் பலி.. கொந்தளித்த உறவினர்கள்
தஞ்சை: பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் சந்தியா (33). நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சந்தியா, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி