சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னையன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மல்லிகா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், முதல் கணவர் சொத்தில் தனக்கும் பங்கு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சேலம் உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், மல்லிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு இந்து திருமண சட்டத்தின் படி உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை உள்ளது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.