“அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிறகு, அதே போன்ற பிரச்னையை வேறு இடங்களில் எழுப்பி, இந்துக்களுக்கு தலைவர்களாகி விடலாம் என சிலர் நினைக்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடரவும் கூடாது. பல தரப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களும் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதற்கு இந்தியா எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்” என நாட்டின் பல இடங்களில் மசூதிகளில் கோயில் இருந்ததாகக் கூறி வழக்கு தொடரப்படுவது குறித்து RSS அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கருத்து தெரிவித்துள்ளார்.