தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாகுட்டா என்னும் பகுதியில், கல்லூரிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பி.டெக் மாணவர்கள் இருவர் மீது தனியார் டிராவல்ஸ் பேருந்து மோதியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து அங்கிருந்து தப்பியது. இந்த விபத்தில், லோகேஷ் (20) என்ற பிடெக் மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.