அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்ட கொடூரத்தை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பொய் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. இவருக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் என பொதுமக்கள் அச்சப்படும் சூழலில் தமிழ்நாடு தவித்துக்கிடந்ததை மறந்துவிட்டீர்களா பழனிசாமி?” என கேள்வி எழுப்பியுள்ளார்.