காஞ்சிபுரம்: திருப்போரூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கந்தசாமி கோயிலுக்குச் சென்ற தினேஷ் என்பவர் உண்டியலில் பணம் போட முயன்ற போது ஐபோனை தவறவிட்டார். இதுகுறித்து கேட்டதற்கு, ‘உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது’ என கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். அம்மன் திரைப்படத்தில், குழந்தை தவறுதலாக உண்டியலில் விழுந்த நிலையில் அந்த குழந்தை அம்மனுக்கே சொந்தம் என கூறும் காட்சி ஒன்று உள்ளது. அதேபோல், நிஜத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.