தமிழகத்தின் தற்போதைய மக்கள் தொகை 8 கோடியே 15 லட்சமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கணக்குப்படி, ஒரு மாநிலத்தில் 400 பேருக்கு ஒரு போலீசார் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் 608 பேருக்கு ஒருவர் என்ற வகையிலேயே போலீசார் உள்ளனர். அதாவது மொத்தமாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 750 போலீசார் பணியில் இருக்க வேண்டும். தற்போதைய கணக்குப்படி பார்த்தால் கூடுதலாக 69,858 போலீசாரின் தேவை உள்ளது.