அமெரிக்காவைச் சேர்ந்த டியூலேன் பல்கலைக்கழகம் 260 வகையான தேன் மாதிரிகளை சேகரித்தது. இதை ஆய்வு செய்தபோது பல தேன் வகைகளில் உடலுக்கு தீங்கு தரக்கூடிய 6 முக்கிய உலோகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லெட், ஆர்சனிக், நிக்கல், குரோமியம், கோபால்ட், காட்மியம் ஆகிய உலோகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தண்ணீர், நிலம் ஆகியவற்றில் உலோகங்களின் அளவு அதிகரிப்பதால் அதில் வளர்கின்ற தாவரங்களிலும் இவற்றின் அளவு கூடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.