எப்எல்2 உரிம கடைகள் நேரத்தைமேலும்ஒரு மணி நீட்டிக்க வேண்டும்

77பார்த்தது
எப்எல்2 உரிம கடைகள் நேரத்தைமேலும்ஒரு மணி நீட்டிக்க வேண்டும்
தமிழ்நாடு எப்எல்2 உரிமைதாரர்கள் சங்கத் தின் கோவை மண்டல உரிமைதாரர்களின் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலை வர் எம். சி. வீரபாண்டியன் தலைமைதாங்கி னார். மாநில செயலாளர் கொக்கரக்கோ சுவாமிநாதன், கோவை போர்டிங் மற்றும் லாட்ஜிங் ஓனர்ஸ் சங்கத்தின் தலைவர் அண் ணாமலை சிவக்குமார், ஈரோடு ஜெயக்குமார், மாரிச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில் சட்ட விரோத மது விற்ப னையை தடுக்க வேண்டி தமிழக அரசு கொண்டு வந்துள்ள மதுவிலக்கு சட்ட திருத் தத்திற்கு வரவேற்பு தெரிவிப்பது, எப்எல்2 உரிமங்களின் செயல்படும் நேரத்தை மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பல்லடம் செந் தில்குமார், திருப்பூர் நீதிராஜன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் சங்கத்தை சேர்ந்த கோவை மண்டல உரிமைதாரர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி