திருப்பூரில் நேற்று (அக்.,22) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் கடுமையான வெயில் காரணமாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் இரவு நேரத்தில் திடீரென கனமழை பெய்தது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருப்பூரில் ராயபுரம் செரிப் காலனி வீரபாண்டி கரட்டாங்காடு பாளையக்காடு கருவம்பாளையம் ஆண்டிபாளையம் பிச்சம்பாளையம் பாண்டியன் நகர் மன்னரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் பல்லடம் கொடுவாய் ஊத்துக்குளி பெருமாநல்லூர் அவிநாசி மங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.