அமைதியான முறையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த ஏற்பாடு

68பார்த்தது
வரும் சனிக்கிழமை ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர். லட்சுமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி ரயில் நிலையம் முன்பு துவங்கியது. ரயில் நிலையம் முன்பு துவங்கிய காவல்துறையினரின் கொடி அணிவிப்பு நிகழ்ச்சியானது டவுன்ஹால், எம்ஜிஆர் சிலை, மாநகராட்சி அலுவலகம், மங்கலம் சாலை வழியாகச் சென்று ஆலங்காடு பகுதியில் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர். லட்சுமி விநாயகர் சதுர்த்தி விழா திருப்பூரில் நான்கு நாட்கள் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அதேபோல பொதுமக்கள் அச்சமின்றி தங்களது பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் கூறினார். இந்த கொடி அணிவிப்பு நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள். கிரிஷ் யாதவ், சுஜாதா, மனோகரன், உதவி ஆணையர்கள். அணில் குமார், செங்குட்டுவன், வேலுச்சாமி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி