திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிலாளர் சங்கங்க ளின் கூட்டம் நேற்று மாலை ஏ. ஐ. டி. யு. சி. அலுவலகத்தில் நடைபெற்றது. ஏ. ஐ. டி. யு. சி. பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். செந்தில்குமார் (ஏ. ஐ. டி. யு. சி. ), சம்பத், நாகராஜ் (சி. ஐ. டி. யு. ), பாலசுப்பிரமணியம், பூபதி (எல். பி. எப். ), சிவசாமி, செந்தில் (ஐ. என். டி. யு. சி. ), முத்துசாமி (எச். எம். எஸ். ), மனோகரன் (எம். எல். எப். ) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தற்போது உயர்ந்துள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கடந்த ஆண்டைக்காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். பனியன் தொழிற்சாலைகளிலும், செக்சன்களிலும் வேலை செய்துவரும் டைம் ரேட், பீஸ் ரேட் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்குள் போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியு றுத்தி அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு கடிதம் கொடுப்பது, இந்த கோரிக்கையை வலியுறுத்தி சங்கங்கள் சார் பில் தனித்தனியாக இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.