வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், சூரி ஆகியோர் நடிப்பில் இன்று (டிச.20) "விடுதலை 2" படம் வெளியானது. முதல் பாகமான விடுதலை படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர் ஒருவர், “நம்மள எந்த அளவுக்கு அடிமையாக வச்சிருக்காங்கனு தான் இந்த படத்துல சொல்றாங்க. என்னோட வேலையில நான் போய் புரட்சி பண்ண போறேன்” என கொந்தளித்துப் பேசியுள்ளார்.