அல்லு அர்ஜுன் கைதுக்கு எதிராக ஒவ்வொரு பிரபலமும் கடுமையாக போராட வேண்டும். ஒருவர் திரைப்பட நடிகராகவோ அல்லது அரசியல் பிரபலமாகவோ இருந்து அவர் மக்களிடையே மிகவும் பிரபலமானவராக இருப்பது குற்றமா? என்னுடைய 'க்ஷண க்ஷணம்' திரைப்பட படப்பிடிப்பின்போது நடிகை ஸ்ரீதேவியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அதற்காக ஸ்ரீதேவியை தெலங்கானா போலீஸ் சொர்க்கத்துக்கு சென்று கைது செய்யுமா? என இயக்குநர் ராம் கோபால் வர்மா X தளத்தில் பதிவிட்டுள்ளார்.