மின்மாற்றி அருகே குப்பையில் கொழுந்து விட்டு எரிந்த தீ

67பார்த்தது
மின்மாற்றி அருகே குப்பையில் கொழுந்து விட்டு எரிந்த தீ
கணியாம்பூண்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் மற்றும் பிரதான சாலை அருகில் உள்பட பல்வேறு இடங்களில் குப்பை அதிக அளவில் கொட்டப்பட்டு அகற் றப்படாமல் உள்ளது. அங்கு அடிக்கடி மர்ம ஆசாமிகள் குப்பைக்கு தீ வைத்து செல்கின்ற னர். இதனால் அப்பகுதி மக்கள் மூச்சுத்திண றல் உள்ளிட்ட சிரமங்களுக்கு ஆளாகி வரு கின்றனர். இந்த நிலையில் நேற்று கிராம நிர் வாக அலுவலர் அலுவலகம் அருகே கொட் டப்பட்டிருந்த குப்பை திடீரென தீப்பற்றி எரிந் தது. குறிப்பாக அருகில் இருந்த மின்மாற் றியை ஒட்டி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் மின்மாற்றி வெடித்து பெரிய அள வில் தீ விபத்து ஏற்பட்டு விடுமோ? என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனவே குப் பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், குப்பைக்கு தீ வைக்கும் நபர்கள் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொது மக்கள் மற்றும் கணியாம்பூண்டி வளர்ச்சிக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.