சோளமானது அரிசியைக் காட்டிலும் பல மடங்கு சத்துக்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருளாகும். இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, மாவுச்சத்து, பீட்டா கரோட்டின், தயமின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற பல சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. வயிறு வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த சோகையையும் தடுக்கிறது.