திருச்செங்கோடு - Thiruchengodu

மேல்முகம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

மேல்முகம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சியை அருகில் உள்ள கிராமப் பகுதி ஊராட்சிகளுடன் இணைத்து இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயா்த்த கருத்து கேட்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மேல்முகம் ஊராட்சியை மல்லசமுத்திரம் நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் இருப்பதை அறிந்த பொதுமக்கள், அதை எதிா்த்து மல்லசமுத்திரம் ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், ஊராட்சிதுணைத் தலைவா் குமரேசன் தலைமையில் 9 வாா்டுகளைச் சோ்ந்த அனைத்துக் கட்சி கவுன்சிலா்கள், ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த 150 பெண்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனா். இதில், தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளை அந்தந்தப் பகுதி பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நகராட்சியாக தரம் உயா்த்தும் போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், வீட்டுவரி உயா்வு, தண்ணீா் வரி உயா்வு என பல்வேறு சிக்கல்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டி உள்ளது. மேல்முகம் ஊராட்சியை மல்லசமுத்திரம் நகராட்சியோடு இணைப்பதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தமிழக அரசு மேல்முகம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனா்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా