சென்னை எழும்பூரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “சென்னை வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்த்தாய் வாழ்த்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. தமிழுக்கு எதிரானவர்கள் பாஜகவினர் என்ற பிம்பத்தை உருவாக்க திமுக முயற்சிக்கிறது. ஐ.நா சபையில் தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றியவர் பிரதமர் மோடி. தமிழ்நாட்டின் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது” என்றார்.