தெலங்கானா மாநிலம் புத்தராவ்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (அக். 19) தாயும் மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். விஜயா (45) மற்றும் அவரது மகன் விக்ரம் (20) ஆகியோர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்தனர். வீட்டின் வெவ்வேறு அறைகளில் இரண்டு பேரும் உயிரிழந்து கிடந்ததாக தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சடலங்களை கைப்பற்றிய போலீசார் மரணத்திற்கான காரணத்தை விசாரிக்கின்றனர்.