இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 462 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 27.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.